தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசிய கொடியை வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
CATEGORIES தேனி
