தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித்தின் துணிவு திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தீவிர ரசிகர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள வீரம் ரெஸ்டாரண்டின் உரிமையாளர் காளிதாஸ் இவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்பட வெளியீட்டு விழாவை கொண்டாடும் விதமாக தனது உணவகத்தில் அஜித்தின் 61 வது திரைப்படம் என்பதை முன்னிட்டு கடைக்கு வரும் 61 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கியும் திரைப்படத்தைப் பார்த்து வரும் ரசிகர்கள் கொண்டு வரும் டிக்கெட்டிற்கு தனது உணவகத்தில் 50 சதவீத சலுகை அளித்தும் உள்ளார்.
மேலும் இன்று முதல் தினமும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா உணவு வழங்கும் திட்டத்தையும் வீரம் காளிதாஸ் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES தேனி
TAGS 1 ரூபாய்க்கு பிரியாணிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி சின்னமனூர் வீரம் உணவகம்தேனி மாவட்டம்நடிகர் அஜித் ரசிகர்கள்முக்கிய செய்திகள்