தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள்
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல்
வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரி,என இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை உட்பட சுமார் 79 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான முதல் பருவ தேர்வுகள் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது இதில் விடை தாள்கள் திருத்தும் பணியில் பேராசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர் இதனை அடுத்து தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகின இதில் வேலூர் ஊரிசு கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறி…
இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் ஆய்வாளர் மற்றும் திருவலம் போலீசார் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் ஆகியோரிடம் அழைத்துச் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் கூறுகையில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் 3200 மாணவ மாணவிகளுக்கு 0 மதிப்பெண் வழங்கியுள்ளதாகவும் மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் பல்கலைக்கழகம் கணினி கோடிங் சீட்டில் விதித்துள்ள விதிமுறைகளை சரியாகப் பேராசிரியர்கள் பின்பற்றாததாலும்,
அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் இதுபோன்று குளறுபடி நடந்துள்ளதாகவும் மேலும் இவ்வாறு நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்றும் அதற்கு அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்லூரி வாழ்க்கையில் விளையாடும் இது இதுபோன்று அஜாக்கிரதையாகவும் மெத்தனப்போக்குடனும் செயல்படும் பேராசிரியர்கள் மீது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.