தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்

தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மோடிக்காடு என்ற இடத்தில் எதிரே வந்த அதில் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் சரக்கு வாகனத்தில் வந்த பழனி (45) என்பவருக்கு அடிபட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்வதற்காக அந்த வழியாக வந்த சேலம் கலெக்டர் கார்மேகம் காரை நிறுத்தி அடிபட்ட வரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து ஏற்படுத்தி நிற்க்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தானே வாகனத்தை ஓட்டிக் சென்று விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சிறைப்பிடித்தார். பின்னர் விபத்துக்குள்ளனவரை மீட்டு அருகே உள்ள மருத்துவ மனைக்கு சென்று பழனிச்சாமியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த விபத்தை குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.