BREAKING NEWS

நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நம்ம ஊரு சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தூய்மை பாரத இயக்கம் , முழு சுகாதாரம் ,நெகிழி தவிர்ப்பு, மரங்கள் நடுதல் ,துணிபை பயன்படுத்துதல் குறித்து சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

 

மேலும் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் துணிப்பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனி குமார், முருகன், கோபி, மற்றும்

 

 

 

ஊரக வளர்ச்சி துறை மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் அதிசயமணி, தமிழ்ச்செல்வி, ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், சுகாதார ஊக்குனர்கள் இனாமணியாச்சி ஊராட்சி ஜெயசாந்தலட்சுமி, வள்ளிநாயகபுரம் கிருஷ்ண செல்வி, திட்டங்குளம் பாலம்மாள், தூய்மை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சௌந்தரராஜன், நிகழ்ச்சி ஏற்பாடினை ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட முதன்மை பயிற்சியாளர் தமிழ்ச்செல்வி,செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )