BREAKING NEWS

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.

நல்லாடை ஸ்ரீ அக்னிஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. பரணி நட்சத்திர பரிகார தலமான இந்த கோவில் அக்னீஸ்வரருக்கு மேற்கு திசை நோக்கியும், சுந்தரநாயகிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகள் உள்ளன.

 

இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வை அளிப்பார் என்பது ஐதீகம்.

 

 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ஸ்வெட்லானா க்ரூசர் ரஷ்யா நாட்டை சார்ந்த இலோனா நாட்டை சேர்ந்தவர்கள் அருள்மிகு சுந்தரநாயகி மற்றும் அக்னீஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 

அதைத்தொடர்ந்து விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, மகாவிஷ்ணு உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபட்டனர். முன்னதாக கோவில் திருப்பணிக்குழு பொறுப்பாளர் ஏ.ஆர்.மதிவாணன் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

 

CATEGORIES
TAGS