நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம், நகர், கோ கொத்தனூர் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டங்களில் வரவு செலவு கணக்குகளை பொதுமக்களிடம் காண்பித்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் மகளிர் சுய உதவி குழுவினரை கௌரவித்தனர்.

இந்த கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அளவிலான அதிகாரிகள் பற்றாளர்களாக கலந்து கொண்டனர்.
அந்த வகையில் வேப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கண்ணு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் தங்க வெங்கடேசன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை தீனதயாளன் தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கட்டிமுத்து, ஊராட்சி செயலர் தங்க வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நகர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலாளர் தங்கவேல், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் பங்கு பெற்றனர்,

அதேபோல் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் திரு.நீலமணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோ கொத்தனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமாரி ரகுநாதன் தலைமை தாங்கினார், ஊராட்சி செயலாளர் சக்திவேல், துணைத் தலைவர் லட்சுமி செல்வராஜ் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் பங்கு பெற்றனர்.
