BREAKING NEWS

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த எம்ஜிஆர் நகரில் தீபக் திருமண மண்டபத்தில் நியூ எருசலேம் யூனிவர்சிட்டி 50 ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் Guest of Honor Most. Dr. Rtn.P.சுந்தர், B.sc, BL., சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் V. M. பாலாஜி, AVL,  தலைமையில் நியூ எருசலேம் யூனிவர்சிட்டி 50 ஆம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியும் சமூக சேவைகளில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்காக சமூக சேவை,நல்லாசிரியர் விருது, விளையாட்டுத் துறையில் அந்தந்த மாவட்டங்களுக்கு பெருமை சேர்த்த ஒவ்வொரையும் அழைத்து பதக்கங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் தாலுக்கா கொத்த குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் சி.பலராமன் 15 ஆண்டு காலம் இறைப்பணி ஆற்றியதற்காகவும், சமூக சேவையில் ஈடுபட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக கொரோனா காலங்களில் குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சானிடைசர், மாஸ்க், மற்றும் 170 பேருக்கு மதிய உணவும்,

அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் செய்த சபை போதகர்களுக்கு அரிசி பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள் 15 பேருக்கும், 25 ஏழை எளிய மக்களுக்கும் 20 நாட்களுக்கு உண்டான மளிகை பொருட்கள் வழங்கியதைப் பாராட்டி பெஸ்ட் சோசியல் சர்வீஸ் டாக்டரேட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் செதுக்கரை பகுதி சேர்ந்த பி முத்தமிழ், பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கே. அறிவழகன், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வி.எம். பாலாஜி AVL, எஸ்.சௌந்தரராஜன் முன்னிலையிலும் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. 

CATEGORIES
TAGS