BREAKING NEWS

நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.

நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.

 

இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை சுற்றியுள்ள ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பு மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவலாக கனத்த மழை பெய்தது.

இந்த மழைநீர் நிலக்கோட்டை மினி பஸ் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக அக்ரகாரப் பட்டி சாலையை கடந்து கே.குரும்பபட்டி கண்மாயில் சேருவது வழக்கம்.

 

அப்படி மழைநீர் செல்லும் வழியில் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்ட பாலம் பழுதடைந்து மழைநீர் செல்ல வழியில்லாத காரணத்தால் மழைநீர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புகுந்தது.

 

அந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்று பள்ளியில் தெப்பம் போல் தேங்கியதால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் தற்போது பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் உள்ளார்கள். எனவே உடனடியாக சேதமடைந்த பாலத்தை வேண்டுமென்றே இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

இதனை போர்க்கால அடிப்படையில் செய்வார்களா? என்று இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )