நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 700-ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பாப்பி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜையுடன் துவங்கி 6 கால் வேல்வி தீபாராதனை, பூஜைகள் நடந்தது.

நேற்று இரவு தாரை தப்பட்டை வாண வேடிக்கை முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சகல யாகங்களும் நடைபெற்றது.
தொடர்ந்து 2வது நாள் நிகழ்ச்சியாக நேற்று கோயில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை பூசாரிகள் இளங்கோவன,ராஜா, முருகன் தலைமையிலும்,பூசாரி பழனிகுமார் திருப்பணிக்குழு பாண்டி முன்னிலையி லும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீருசின்னுமுருகன், துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு ஆகிய நகரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
