BREAKING NEWS

நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.

நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம், ஒருதட்டு, விருவீடு, வத்தலகுண்டு உள்ளிட்ட வருவாய் பிரிவுகளில் உள்ள 40 கிராமங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வருவாய் ஜமாபந்தி முகாம் திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி வருவாய்த் தீர்வாயம் ஜமா பந்தி வந்து தொடங்கி நடைபெற்று வந்தது.

 

இந்த முகாமில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 362 மனுக்கள் வரப்பட்டன.

இந்த மனுக்களில் மனுக்கள் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. மற்றும் அணுக்கள் மீது விரைவில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்ற மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இந்த முகாமில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மண்டல துணை தாசில்தார்கள் மூர்த்தி, பாலகுருநாதன், வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அங்கு சாமி, மீனாட்சி, நாகசுந்தரம், பிரேமலதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ம.ராஜா.

CATEGORIES
TAGS