நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு எதிரொலி அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை யிலும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன்,
நிலக்கோட்டை நகர பொருளாளர் பூக்கடை சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் மோகன்குமார் , கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சங்கையா, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.