நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ஷேக் முகைதீன் வரவேற்று பேசினார்.
நகர தலைவர் கலில் ரஹ்மான், பொருளாளர் முகம்மது அலி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா துவக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி, காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.சக்தி நடராஜன், புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட பொருளாளர் ஏர்வை இளையராஜா, வரத்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷபி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் வடுகநாதன், ஆசிரியர் குமரேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமார், 7வது வார்டு உறுப்பினர் கொம்பையா, 10 வது வார்டு உறுப்பினர் ஆதம் திமுக பிரதிநிதி இக்பால் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.துவக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 120 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்டை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. இறுதியாக நகர செயற்குழு உறுப்பினர் நிஜாம் நன்றி கூறினார்.