நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி, மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்கும் என காவல் ஆணையாளர் கூறினார்கள்.
உடன் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சரவணகுமார் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள்.
குறை தீர்க்கும் முகாமில் 35 பேர் கலந்து கொண்டு புகார் மனுக்களை காவல் ஆணையாளர் அவர்களிடத்தில் அளித்தார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
