நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவி தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் தனி தாசில்தாரிடம் கோரிக்கை மனு.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவுடை டி.பாலன் ராதாபுரம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செல்வகுமாரை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் பின் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழக அரசு ஆதரவற்ற முதியோர், விதவை, ஊனமுற்றோர்,கணவனால் கைவிடப்பட்டவர்கள்,முதிர்கன்னி போன்றவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கி வந்தது. ஆனால் கடந்த மாதங்களில் இருந்து ராதாபுரம் தாலுகா வில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
குறிப்பாக விஜயாபதி ஊராட்சி பகுதியில் எந்த ஒரு ஆதரவு இல்லாத வறுமை பிடியில் சிக்கி தவிக்கும் பயனாளிகளுக்கு எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து உயிரை இழக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.
எனவே தகுதியானபயானிகளுக்கு உடனடியாகஉதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். தவறும் பட்சத்தில் வரும் ஜூலை 21 ம் தேதி வியாழக்கிழமை பொதுமக்கள், அரசியல் கட்சியினர்,சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி ராதாபுரத்தில் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.” மேற்கொண்டவாறு ஆவுடை பாலன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவின் நகல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.
