BREAKING NEWS

நெல்லையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெல்லையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார். 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

 

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் 25 இடங்களில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

 

காரில் முதல்-அமைச்சர் சென்றபோது சாலையில் பெண்கள் ஏராளமானோர் நின்று இருந்தனர். அப்போது காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி சென்று முதல்-அமைச்சர் மனுக்களை பெற்றார்.

 

 

இதேபோல் மாற்று திறளாளிகள் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் அருகில் சென்று நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

 

 

பின்னர் பாளை மார்க்கெட் பகுதியில் சென்றபோது ஏராளமான சிறுவர், சிறுமிகள், திருவள்ளுவர், அன்னை தெரசா உள்ளிட்டவர்களின் வேடம் அணிந்து நின்றிருந்தனர்.

 

 

அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் அவர்களுக்கு கை கொடுத்து அவர்களுடன் சிறிது நேரம் கொஞ்சி பேசினார்.

 

இதேபோல் விழா மேடை வரை பல்வேறு இடங்கிளில் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )