பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் சிவன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர் தொடர்ந்து முருகனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
CATEGORIES மயிலாடுதுறை
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்