BREAKING NEWS

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

 

பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை எடுத்துக் கூறினர்.

 

 

அதில், பெரும்பாலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு மற்றும் சேதமடைந்திருக்கும் பாலத்தை சீரமைத்து தர வேண்டுமெனவும், வெள்ளரி வெள்ளி ஏரியின் உபரிநீர் செல்வதற்கான ஓடையை தூர்வாரி கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

 

 

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பேசுகையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து ஒருமாத காலத்திற்குள் குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )