பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பரமக்குடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான பால்குட வைபவம் இன்று நடைபெற்றது. திருவிழாவில் பாஜக ஆதரவு வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பக்தர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் தேனி எம்பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது கோவில் அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் சுட சுட பணியாரம் சாப்பிட்டார்.
CATEGORIES இராமநாதபுரம்