BREAKING NEWS

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து ” பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில்,

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம்,  மேலசங்கரன்குழியில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 

இந்நிகழ்ச்சியில் MJ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் டெஃபி அவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்தும், அது எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்தும் மிக தெளிவாக பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

 

மேலும் பயனுள்ள தகவல்களை டெங்கு காய்ச்சல் குறித்து கூறினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

மேலும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளும் அப்பள்ளியில் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சமூக பணித்துறை மாணவி ஜா.செல்வ டிசாலினி ஆவார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )