BREAKING NEWS

பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.

பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.

குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த TN 05 BQ 7666 என்கின்ற சென்னை பதிவை கொண்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்தபோது கார் நிற்காமல் காவலர்கள் மீது மோதுவது போல் வந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

 

இதனை அடுத்து பின்னால் சுமார் 15 கிலோமீட்டர் துரத்திச் சென்ற காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் ஏர்போர்ட் கூட்ரோட்டை அடுத்த கம்மாரபாளையம் அருகே பதுங்கி இருந்த கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர்.

 

பின்னர் விசாரணை மேற்கொண்ட போது டாட்டா எக்ஸா வாகனத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பான்பராக் உள்ளிட்ட சுமார் 1 டன் கொண்ட குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 

மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட குஜராத் சேர்ந்த முகேஷ் புரி, ராஜஸ்தானை சேர்ந்த கரண் (எ) வர்சிராம் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்குமென தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS