பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம்,
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தியதை கண்டித்தும்,
இஸ்லாமியர்கள் கைது செய்துள்ளதை கண்டித்தும் எவ்வித நிபந்தனைமின்றி அவர்களை விடுவிக்க கோரியும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமையாக நகர தலைவர் பாரிஸ் அகமது வரவேற்புரையாக ஆசிக்ராஜா தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையாக மாவட்ட தலைவர் கைசர் அலி
மஜக சாந்து முகமது விசிக பொதினிவளவன், பாவேந்தன், தமுமுக சேக் முகமது, தி.க,இரணியன் தமிழ் புலிகள் தர்மராஜ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அபூபக்கர் சித்திக், இந்திய தேசிய லீக் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கருத்துக்களை சிறப்பு அழைப்பாளர்கள் எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களும் பெண்கள் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சதாம் உசேன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.