பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சி கட்டடம் உள்பட மாநகர் முழுவதும் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி விழாவாக கொண்டாடுங்கள் என பிரதமரின் வேண்டுகோள்படி, தஞ்சை மாநகராட்சி கட்டடம், நகரின் முக்கிய சாலைகள் உள்பட மாநகரம் முழுவதும் மூவர்ண கொடி வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. சாலையில் செல்வோர் மூவர்ண வண்ண மின் விளக்குகள் மத்தியில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்