பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைவர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் ஆட்டோ, பஸ் ஓட்டுநர் என பலருக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் பவானி நகரப் பகுதியில் உள்ள டீ கடை, பேக்கரி, ஓட்டல், செல்போன் கடை உட்பட பல்வேறு கடைகளுக்கு சென்று வியாபாரிகளை பொருளாதாரம் காக்கும் வணிகர்களே தமிழைக் காக்க வாருங்கள் என்று மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை ஒவ்வொரு கடையாகச் சென்று தங்கள் கடைகளில் தமிழில் பெயர் வைக்க கோரி துண்டு பிரச்சனைகள் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பவானி நகர தலைவர் பிரகாஷ், இளைஞர் சங்கர் தலைவர் பிரபாகரன், மூத்த நிர்வாகிகளான ஈஸ்வரன், மோகன், அழகப்பன், சிங்காரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.