பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் பாதாள சாக்கடை நீயிர்கள் உடைந்து குடிநீர் குழாய்கள் மூலம் கலந்து பொது மக்களுக்கு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் கழிவுகளுடன் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை பகுதியில் தற்போது பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் ஜலதோஷம் உள்ளிட்ட மர்மமான நோய்கள் பரவி வரும் நிலையில் நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று எந்த பயனும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடிப்பதற்கு பயன்படுத்தும் குடிநீரில் பாதாள சாக்கடையில் இருந்து உடைப்பு ஏற்பட்டு அந்த நீர் குடிநீர் குழாயில் கலந்து பொது மக்களுக்கு செல்கின்றது இதனை நகராட்சி நிர்வாகிகள் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் தற்பொழுது பரவை வரும் ப்ளூ வைரஸ் மர்மமான முறையில் ஆங்காங்கே பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த குடிநீரில் மேலும்பல்வேறு நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளது எனவும் மாலை நேரங்களில் கொசு தொல்லைகள் அதிக அளவில் பொதுமக்களை தாக்கி வருவதாகவும்மருந்து தெளிப்பதில்லை யாவும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் சொத்து வரி தண்ணீர் வரி ஆகியவற்றை தாமதமாக செலுத்தினால் நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகம் இத்தகைய நோய் பரவும் அபாயத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக எந்த ஒரு முயற்சியும் செய்வதில்லை என தெரிவிக்கின்றனர் இது சம்பந்தமாக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு ஏன் தாமதமாக உள்ளது எனவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தனர்.