பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும்பயிற்சி பாசறை சார்பில் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராககலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ச.மயில் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பேசுகையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்டத் திருத்த விதி 65 Aவின் கீழ் நிறைவேற்றி உள்ள சட்ட திருத்தமானது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டமாக இருக்கிறது எனவும்,
மேலும் தொழிலாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு 8 மணி நேர வேலை என்கிற உரிமையை பெற்ற நிகழ்வு இன்றைக்கு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தமிழ்நாடு அரசு பெற்ற சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்வதாகவும்.,
மேலும் தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில்ஆசிரியர் மற்றும்அரசு ஊழியர்களுக்குஅறிவித்த வாக்குறுதிகளைநிறைவேற்ற வில்லை எனவும்அவர் கூறினார்.