பாலமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான டேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பாலமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு பாண்டியன் கெமிக்கல் சாரிட்டபிள் மற்றும் டி.கே சாரிட்டபிள் அறக்கட்டளை சென்னை சார்பில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் ஒன்றை லட்சம் மதிப்பிலான டேபிள், சேர்கள் மற்றும் உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்குமார், கவர்னர் தேர்வு நியமனம் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பட்டினை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பி முன்னாள் மாணவர் ஆதித்தன் செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுபிதா ராணி வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தலைமையாசிரியர் சுகந்தி வயோலா நன்றி கூறினார்.