BREAKING NEWS

புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா

புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா

புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா உற்சாகம். சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜர் பெருமைகளை பறை சாற்றும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.

 

சென்னை புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி மற்றும் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

 

கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருஉருவ படத்திற்கு சென்னைவாழ் நாடார் சங்கத்தின் தலைவர் சின்னமணி நாடார் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

 

சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கல்வி கண் திறந்த காமராஜரின் சாதனைகள் குறித்து மாணவர்கள் நாடகம், நடனம் மூலம் தத்ரூபமாக விளக்கிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

 

மாணவர்களின் கல்விக்காக ஆற்றிய பணிகள், மதிய உணவுத்திட்டம், அணைகள் கட்டி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாணவர்கள் தத்ரூபமாக நடத்து காண்பித்தனர். இதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முனைவர் கவிஞர் ரவிபாரதி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி மற்றும் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.

 

மேலும் செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற BLOSSOM 2023ல் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னைவாழ் நாடார் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கமுத்து பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS