பெங்களூர் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதி.

சேலம் மாவட்டம், ஆத்தூர், பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் இன்று மதியம் சேலத்திலிருந்து ஆத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் பவர் கார் ரயில் பழுதாகி பாதி வழியில் நின்றதால் விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை எடுத்து சின்னசேலத்தில் இருந்து சேலம் சென்ற பவர் கார் ரயிலைசேலத்தில் இருந்து ரயில் இன்ஜினைவரவழைக்கப்பட்ட பவர் கார் ரயில் புறப்பட்ட பின்னரே பெங்களூர் காரைக்கால் ரயில் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதால்,
பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ரயிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயணம் செய்த பயணிகள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிகுள்ளாகி உள்ளதாகவும் மேலும் தங்களது சொந்த ஊருக்கு நேரத்திற்க்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும்,
இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் உணவு அருந்த உணவகம் , மற்றும் தேநீர் அருந்தவும் கடைகளும் இல்லை என்றும் குழந்தைகள் பசியுடனும் இருப்பதாகவும் பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
