BREAKING NEWS

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

பேரணாம்பட்டு அரவட்லா சாலையில் துரைசாமி அவர்களுக்கு சொந்தமான வஜ்ரம் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது.

 

இந்த கம்பெனியில் விறகுக்கு பதிலாக இரவு நேரங்களில் மாட்டு ஜவ்வாளான சூராக்களை எறிய விட்டு மாசு கலந்த புகைகளை வெளியேற்றபடுவதாகவும்,

கம்பெனியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றி குடிநீரை மாசுபடுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

மேலும் குடியிருப்பு பகுதியான இப்பகுதிகளில் அரசு உயர்நிலைப் பள்ளியும் தனியார் பள்ளியும் அருகிலேயே செயல்பட்டு வருவதால் இந்த வஜ்ரம் கம்பெனியில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசுவதாகவும்,

 

இதுபோல் பல தவறுகளை இந்த வஜ்ரம் கம்பெனி நிர்வாகத்தினர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் இது பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவதாகவும்,

 

 

பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேற்கண்ட வஜ்ரம் கம்பெனி மீது ஆய்வு செய்து உண்மையான தெரியவரும் பட்சத்தில் இந்த வஜ்ரம் கம்பெனி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )