BREAKING NEWS

பேரணாம்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

பேரணாம்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமத் தலைமை தாங்கினார்.

நகர மன்ற தலைவர். வி. பிரேமா வெற்றிவேல், மூத்த நகர மன்ற உறுப்பினர் டி.அப்துல் ஜமீல், ஆலியார் ஹர்ஷத் அஹமத், நகர திமுக துணைச் செயலாளர் பி. பொற்கைபாண்டியன் (எ) சின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் எம்.பிரபாத் குமார், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெ.ராஜமார்த்தாண்டன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், நகர மன்ற உறுப்பினர்கள் பி. நாகஜோதி பாபு, எஸ். சுல்தானா அப்துல் பாசித், எல். சின்ன லாசர், கே.தேன்மொழி கிருபாகரதாஸ், நாகிஹா ஜூபேர் அஹமத், சாஜிரா பேகம் சலீம் பாஷா, எஸ். இந்திரா காந்தி, சரவணன், பிற அணி பொறுப்பாளர்கள் வெ. கலைநேசன், கே. பாஸ்கரன், திமுக கிளைச் செயலாளர்கள் இசர்ட் . இம்தியாஸ் அஹமத், யாக்கோபு (எ) சின்னா, ஆர்.பாபு, எஸ். அப்துல் பாசித், பி. லாசர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS