பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இந்த 21-வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடிவதில்லை. ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைகின்றது.
சமீபத்தில் 2 – 3 -வார்டுகளில் 20 நாட்களில் 5 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். இருசக்கர வாகனங்களின் சத்தத்தைக் கேட்டால் மட்டும் வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்காக நாய்கள் விரட்டிச் செல்கின்றன.
எனவே இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர், பணி மேற்பார்வையாளர் தவமணி, பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் ஆகியோர் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் நடப்பது போல நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகர்வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது.