BREAKING NEWS

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

வேலூர்,  பேரணம்பட்டு நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும்,

விடுதிக்காப்பாளர் சுபாஷினி சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பத்து மாணவிகள் மட்டுமே உள்ள இந்த விடுதியில் அதிக மாணவிகள் தங்கி இருப்பதாக பொய்யான கணக்கு வழக்குகளை பதிவேட்டில் பதிவு செய்து விடுதி காப்பாளர் சுபாஷினி முறைகேடுகள் செய்வதாகவும்,

 

இந்த மாணவியர் விடுதியில் சுபாஷினியின் கணவர் அடிக்கடி வந்து சுபாஷினியின் பணிகளை செய்வதாகவும் இதனால் மாணவிகள் சங்கடப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இது குறித்து தனி தாசில்தாரர் சரவணனுக்கு பொதுமக்கள் வாய்மொழியான புகார்களை சொல்லியும் தனித்தாசத்தார் சரவணன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

மேலும் இந்த விடுதியில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகளுக்கு தனி தாசில்தார் சரவணன் துணை போவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடராமன் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கவனத்திற்கு கொண்டு சென்று விடுதியில் நேரடியாக ஆய்வு செய்து விடுதி காப்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )