பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் வீணாகும் குடிநீர்: கண்டுகொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர்!

வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு 3-வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு பேரணாம்பட்டு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
வாரந்தோறும் இப்பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் டேங்க் நிரம்பி மணிக்கணக்கில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது.
இது இன்றைக்கு, நேற்றல்ல வருடக்கணக்கில் தொடர்கிறது. இது ஒரு சில ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், ஒரு முன்னேற்றமும் இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரும் இதை கண்டுகொள்வதில்லை.
எனவே இதுகுறித்து பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மங்கயர்கரசனும், நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் தவமணியும் இந்த பிரச்னையில் தலையிட்டு இனிவரும் காலங்களிலாவது
இது போல் குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது.