பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா?
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி நிரம்பி மணிக் கணக்கில் குடிநீர் வீணாகி வெள்ளமென சாலையில் பாய்கிறது.
கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் குடிநீருக்கெல்லாம் பஞ்சம் ஏற்படும் நிலையில் இப்படி அரசு பள்ளியில் இருந்து மணிக்கணக்கில் குடிநீர் எல்லாம் வீணாக போவது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயமாகும்.
எனவே இது குறித்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். (பொறுப்பு ) தலைமையாசிரியர் கோவிந்தன் இதில் தலையிட்டு இனிவரும் காலங்களில் இதுபோல் குடிநீர் வீணாகாமல் இருக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது .