BREAKING NEWS

பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.

பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 11-வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயில் இருந்து கால்வாய் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் எடுத்துப் போட்டுள்ளனர் 10 நாட்களாகியும் அந்த கால்வாய் கழிவுகளை அல்லாமல் அப்படியே விட்டுவிட்டு இருக்கிறார்கள் இதனால் அப்பகுதி மக்களுக்கு துர்நாற்றம் வீசி உள்ளது.

 

 

இதை அறிந்த ஒரு சில சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்களுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த செய்தியை போடும்படி கேட்டுக் கொண்டனர் இதனால் பேரணாம்பட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க துணைத் தலைவருமான டாக்டர் கதிரேசன் அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

 

 

அப்பொழுது திமுக கவுன்சிலரான டி அப்துல் ஜமீல் என்பவர் ஏன் போட்டோ எல்லாம் எடுக்கிறீர்கள் செய்தி எல்லாம் போடக்கூடாது போட்டால் விபரீதம் ஆகிவிடும் என்று நிருபரை மிரட்டி உள்ளார் அதற்கு நிருபர் இப்பகுதி மக்கள் செய்தி சேகரிக்க அழைத்திருக்கிறார்கள் நாங்கள் செய்தி சேகரிக்கிறோம் இது எங்கள் கடமை இடையில் நீங்கள் தடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

 

அதையும் மீறி நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஜமீல் நிருபர் டாக்டர் கதிரேசனை தாக்க முயன்றுள்ளார் இதனால் விரக்தியடைந்த நிருபர் கதிரேசன் பேரணாம்பட்டு காவல் நிலைய காவல் நிலையத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஜமீல் மீது தனது பணியை தடுத்ததாகவும் தன்னை தாக்க முயன்றதாகவும் புகார் மனு ஒன்றை அளித்தார். ஏற்கனவே திமுக நகர மன்ற உறுப்பினரான அப்துல் ஜமீல் பல ஆண்டுகள் நகர மன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார்.

 

 

இவர் தனது வார்டில் பல்வேறு முறைகேடுகளை செய்து நகராட்சி மூலம் கிடைத்த நலத்திட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யாரேனும் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஜமிலிடம் சென்று குறைகளை சொன்னால் எனக்கு ஓட்டு போட்டவர்கலுக்கு மட்டும்தான் நான் வேலை செய்வேன் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கெல்லாம் நான் வேலை செய்ய மாட்டேன் என்று திமிராக பேசி அனுப்பி உள்ளார். அது மட்டுமல்லாமல் குப்பை வார வரும் நகர மன்ற ஊழியர்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுங்கள் வீட்டுக்கு ஐம்பது ரூபாய் கொடுங்கள் 100 ரூபாய் கொடுங்கள் என்று வீடு வீடாக சென்று அதிகாரத்தோனைல் பேசியுள்ளார்.

 

மேலும் இப்பதில் நடைபெற்று வரும் புதிய கால்வாய் பணிகளில் தேவையில்லாமல் தலையிட்டு இந்த கால்வாய்களை சரி செய்ய வேண்டுமென்றால் வீட்டிற்கு ஆயிரம் முதல் 1500 ரூபாய் கொடுங்கள் அப்பொழுதுதான் இதை எல்லாம் சரி செய்யப்படும் என்று பேசி உள்ளதாக இப்பகுதி மக்கள் மிகுந்த மன வருத்தத்துடன் வேதனையிலும் உள்ளனர்.

 

மேலும் பத்திரிகையாளரிடம் அவ மரியாதையுடன் நடந்து கொண்ட திமுக நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஜமீல் பல்வேறு முறையில் முறைகேடுகளை செய்து ஊரை அடித்து உலையில் போட்டு ஊரார் பணத்தில் தன் உடம்பை வளர்ப்பதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் திமுகவைச் சேர்ந்த மாவட்டம் மாநில அளவிலான நிர்வாகிகளும் அப்துல் ஜமீல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    Mohamed owais 4 years

    That is fact is true any action by ias Pernambut council

  • Disqus ( )