BREAKING NEWS

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் பகல் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் பகல் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிடும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள்: கண்டுகொள்ளாத வருவாய் ஆய்வாளர் சற்குணா, வட்டாட்சியர் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பார்களா?

 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பி விடுவதாகவும் இதனால் பல்வேறு தேவைகளுக்காக, கிராம நிர்வாக அலுவலர்களை தேடி வரும் பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் மூடிக்கிடப்பதால் ஏமாந்துத் திரும்பிச் செல்வதாகவும் தகவல்கள் பொதுமக்களால் புகாராக கூறப்படுகிறது.

இது குறித்து மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் சற்குணாவிடம் பல முறை வாய்மொழியான புகார்களை அழித்தும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும், சகட்டுமேனிக்கு பொதுமக்களிடம் பொறுப்பற்ற பதிலைக் கூறிவிட்டு கழுவுற மீனில் நழுவுகிற மீன் போல கழன்று விடுகிறார்.

மேற்கண்டவாறு தவறுகளை செய்யும், ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்களிடம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய் ஆய்வாளர் சற்குணா ஹி.. ஹி… என்று பல்லை இளித்துக் கொண்டு, தவறு செய்யும் கிராம அலுவலர்கள் கொடுக்கும் கப்பத்தைப் பெற்றுக் கொண்டு தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல சும்மா இருந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

அதோடு மட்டுமின்றி மேல்பட்டி உள்வட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடும் விஷமிகளுக்கு வருவாய் ஆய்வாளர் சற்குணா துணை போவதாகவும் தெரியவந்துள்ளது.

இதே மேல்பட்டி உள்வட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு சரஸ்வதி என்ற வருவாய் ஆய்வாளர் பணியாற்றியதாகவும், மணல் கடத்தல்காரர்களுக்கெல்லாம், ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியர் என்றும்,

சரஸ்வதி தைரியத்தில் ஒரு பெண் புலி என்றும், இரவு 2 மணிக்கு மணல் கடத்துகிறார்கள் என்று தகவல் வந்தால் தான் ஒருவர் மட்டுமே டூவீலரில் சென்று மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளையும், டிராக்டர்களையும்

பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதில் சரஸ்வதி பலே கில்லாடி என்றும், அவரது காலடி மண்ணை எடுத்து சற்குணா போன்றவர்கள் தங்களது நெற்றியில் திருநீராக அணிந்து கொண்டாலே கடமையுணர்ச்சியும், நல்ல அதிகாரி என்ற நற்பெயரும், தானாக வந்துவிடும் என்றும் மேல்பட்டி உள்வட்ட பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து பேரணாம்பட்டு பொதுமக்களால் கடமை தவறாத அதிகாரி என்று போற்றப்படும் வட்டாட்சியர் ராஜ்குமார் இதிலும் சற்று கவனம் செலுத்தி தவறு செய்யும் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும் இதற்கு துணை போவதாகக் கூறப்படும் வருவாய் ஆய்வாளர் சற்குணா மீதும் துறை ரீதியான கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே மேல்பட்டி உள்வட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இனி அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS