பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா மத்தூர் பகுதியில் மாட்டு தோலாலான தலைச்சக்கையை அலசுவதற்கென்றே ரமணா என்பவர்களுக்கு சொந்தமான. குடோன் ஒன்று இயங்கி வருவதாகவும்,
இந்த குடோனிலிருந்து உப்புத் தலைச்சக்கையை அலசி அருகிலுள்ள மண் தரையில் வெளியேற்றுவதாகவும். இதனால் அந்த உப்புச்சக்கையில் உள்ள சில ரசாயனக் கலவைகளால். நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
மேலும் கொத்தூரில் இயங்கி வரும் குவாலிட்டி, வஜ்ரம் பவுடர் கம்பெனிக்கு இந்த குடோனிலிருந்து தான் உப்புச் சக்கைகளை அலசி தலைச்சக்கை எடுத்துச் செல்வதாகவும். குடியாத்தம். பேரணாம்பட்டு, ஆம்பூர், போன்ற ஊர்களுக்கு பயணிக்கும். பயணிகளுக்கும் பாலூர் மற்றும் கொத்தூர் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கும்,
குவாலிட்டி வஜ்ஜிரம் பவுடர் அரைக்கும் கம்பெனியிலிருந்து தினமும். துர்நாற்றம் வீசுவதாகவும். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. கூட இதே வழியில் அடிக்கடி வருவதாகவும். மேற்கண்ட கம்பெனி கொடுக்கும். ஒரு சில அன்பளிப்புக்காக அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்.
ஒரு சில விவசாயிகளும் மேற்கண்ட தப்புகளை கண்டுக் கொள்வதில்லை என்றும். ஆனால் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி இரவிச்சந்திரன் ஒரு நேர்மையான அதிகாரி என்றும்,
அவர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி மேற்கண்ட கம்பெனி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.