BREAKING NEWS

பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம், புதுத்தெரு, இலுப்பக்கோரை, மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெல்லம் உற்பத்திக்கான ஆலை கரும்பு பயிரிட்டு. தற்போது அறுவடை பணிகள் தொடங்கி வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

 

வெல்லம் உற்பத்தியாளர்கள் இதற்காக கரும்பை நன்றாக சுத்தம் செய்து எந்திரத்தில் விட்டு கரும்பு சாறு எடுக்கின்றனர். பின்னர் பெரிய கொப்பரையில் கொட்டி நன்றாக காய்ச்சி கின்றனர்.

 

 

பாகு பதம் வந்த பிறகு அவற்றை மற்றொரு கொப்பரையில் கொட்டி கிளறிவிட்டு அச்சுப் பெட்டியில் கொட்டி வைத்து அச்சு வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர்.

 

 

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் வேளாண் கூட்டுறவு மையம் மூலம் வெல்லம் கொள்முதல் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 

CATEGORIES
TAGS