BREAKING NEWS

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.

பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.

தஞ்சாவூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு, ஆச்சனூர், மருவூர், வடுக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில வாழை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

 

 

பொங்கல் பண்டிகை வர உள்ளதை ஒட்டி விவசாயிகள் வாழை தார் பூச்சி தாக்குதல், பனி பாதிப்பு உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்பட்டு அழுகி வீணாகாமல் இருக்க தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தல் படி துணி சாக்கு போட்டு மூடி பாதுகாத்து இயற்கை முறையில் வாழை உற்பத்தி செய்து வருகின்றனர்.

 

இதன் மூலம் வாழை தார் அதிக விலை போகும் என மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதிக்கு ஏற்றதாக இந்த வாழைப்பழங்கள் இருக்கும் என்பதால் ஏற்றுமதி நிறுவனங்கள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

இந்த பொங்கல் வாழை விவசாயியான தங்களுக்கு இனிப்பான பொங்கலாக அமைய வேண்டும் என்றால் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பையில் கரும்பு வழங்குவதைப் போல்,

 

 

ஒவ்வொரு ரேஷன் காற்றுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழம் வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் சத்துணவில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வாழைப்பழங்களை வழங்க முன் வந்தால் ஒரு வாழைப்பழத்தை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

பேட்டி மதியழகன் வாழை விவசாயி திருவையாறு

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )