BREAKING NEWS

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாய விலைக்கடை திறப்பு.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாய விலைக்கடை திறப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சியில் கடிச்சம்பாடி, அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 540 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதற்காக பொதுமக்கள் அரசிடம் தனியாக நியாய விலைக்கடை வேண்டும். என கோரிக்கை வைத்தனர்.

 

 

இந்த கோரிக்கையை ஏற்று புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா M.முருகன் கலந்து கொண்டு நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்.

 

இதில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர்,மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், அமுர்த. விஜயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் க.கார்முகிலன்.

CATEGORIES
TAGS