போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தினசரி காய்கறி மார்க்கெட்டை நகராட்சி புதிதாக கட்டியுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வணிக வளாகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்குபெற்ற வர்த்தகர்கள் வியாபாரிகள் தங்கள் பகுதியில் 120 கடைக்கு மேல் உள்ளது என்றும் நகராட்சி சுமார் 40 கடைகளை மட்டுமே கட்டியுள்ளது என்றும் பாக்கி உள்ள கடைகளுக்கு வியாபாரிகள் வர்த்தகர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
கடைகள் அதிக வாடகை இருப்பதால் தங்களால் கட்ட இயலாது என்றும் நகராட்சியால் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்திற்கு தங்களால் செல்ல தற்பொழுது இயலாது என்றும் தெரிவித்தனர் இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.