BREAKING NEWS

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நடந்த விவாதத்தில் அரசு வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்புக்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் 2 போலீசார் கூட இல்லை. அரசு விழாவுக்கு முறையாக பாதுகாப்பு கொடுப்பது போலீசாரின் கடமை.

எனவே உண்மையை மறைத்து, தவறான அறிக்கை வெளியிட்டிருக்கும் போலீசை கண்டித்து வரும் 12ஆம் தேதி சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS