BREAKING NEWS

மகனுக்கும் பதவி கொடுத்த மனோ தங்கராஜ்.

மகனுக்கும் பதவி கொடுத்த மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை மீண்டும் தக்கவைத்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். முந்தைய ஆட்சியில் எம்எல்ஏ-வாக மட்டும் இருந்தபோது அடக்க ஒடுக்கமாக தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தார் மனோ.

 

இப்போது அமைச்சர் ஆனதும் அவரது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிட்டது. தந்தைக்குத் துணையாக மகன் ரிமோனும் மாவட்ட அரசியலில் பட்டையைக் கிளப்புகிறார்.

 

அப்பா அமைச்சர் ஆனதுமே, சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டு விட்டு நேரடி அரசியலுக்கு வந்தார் ரிமோன். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறைக்கு அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், சொந்த மாவட்டத்தில் இல்லாத நாட்களில் அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ரிமோன் தான் ஆஜராகிறார்.

 

இதையெல்லாம் பார்த்துவிட்டு, “கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத இவருக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம்?” என ஆங்காங்கே சிலர் முனு முனுத்தார்கள்.

அவர்களின் வாயையும் இப்போது அடைத்துவிட்டார் மனோ. ஆம், இந்தமுறை ரிமோனை கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கிவிட்டார் மனோ தங்கராஜ்.

 

இப்போதும் சும்மா இருக்க முடியாதவர்கள், “ஒரே குடும்பத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் பதவியா?” என அடுத்த அங்கலாய்ப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )