மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள்.
ஆனால் அதனை திருடிய சில மர்ம நபர்கள் அதனை விற்பனை செய்தது தெரியவந்தது இதனை அடுத்து வேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 12 திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்த செல்போனை மீட்டு வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு இணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரசண்ணா ஆகியோர் மகாராஷ்டிர போலீஸ் வழங்கி ஒப்படைத்தனர்.
மகாராஷ்டிராவில் திருடப்பட்ட 12 செல்போன் களை டிராக் செய்து மகாராஷ்டிரா காவல்துறையினர் வேலூர் வந்த தமிழக காவல்துறையின் உதவியோடு அதனை மீட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்செல்போன் திருட்டுசெல்போன்கள் மீட்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மகாராஷ்டிராமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்வேலூர் வடக்கு காவல் நிலையம்