BREAKING NEWS

மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..

மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது விவசாயிகள் வேதனை.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த 10- 11 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து ஐந்தாவது நாளாக சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

 

 

இந்நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் காணப்படுவதால் அவை தண்ணீர் ஓட்டத்தை தடுத்து தேக்க நிலையை ஏற்படுத்துகின்றன.

 

விவசாய நிலங்களில் இருந்து வடிகால் வாய்க்கால்கள் வழியே மகிமலையாறு காவிரி ஆறு, வீரசோழன் ஆறு, மஞ்சளாறு, மண்ணியாறு, தெற்குராஜனாறு, வெள்ளைப் பள்ளம் உப்பனாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே தண்ணீர் கடலுக்குள் சென்று வடிந்து வருகிறது. 

 

 

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக் கொண்டிருப்பதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக பல இடங்களில் கரைகளைத் தாண்டி தண்ணீர் வழிந்து விவசாய நிலங்களுக்குள் பெருக்கெடுத்து அப்படியே தேங்கியுள்ளன. வயல்வெளிகளில் மூன்று அடிகளுக்கு மேல் தண்ணீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன.

 

 

காழியப்பனள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு என்ற இடத்தில் ஆகாய தாமரைகள் காரணமாக மகிமலை ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்கள் ஐந்து நாட்களாக நீரில் மூழ்கியுள்ளன.

 

இதில் இளம் சம்பா நாற்றுகள் தண்ணீரில் கரைந்து விட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )