மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.

திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சி, சங்கராமநல்லுர் பேரூராட்சி பகுதியில் சாமராயபட்டி ,
பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .
மற்றும் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், மடத்துக்குளம் பேரூராட்சி செங்கழனி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளபட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொது செயலாளர் சண்முகவேலு,
குமரலிங்கம் பேரூராட்சி மடத்துக்குளம் பேரூராட்சி, சங்கராமநல்லூர் பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்டிடிவி தினகரன் 60வது பிறந்த நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம்முக்கிய செய்திகள்