மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?

தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.?
கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், மண் கடத்தல சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்டம் கும்பல்களுடன் கை கோர்த்து கொண்டு மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திமுகவைச்சேர்ந்த ; கோவர்தனன்; மற்றும் இரும்புலி குணா மற்றும் சில அதிமுக புள்ளிகளுடன் கைகோர்த்துகொண்டு ஆய்வாளர் தன் கட்டை பஞ்சாயத்து லீலைகளை புரிந்துவருகிறார் என குற்றம் சாட்டுகிறது காக்கி வட்டாரம்
இந்நிலையில்,
ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால்; தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட் அருகேயுள்ள இடத்தில் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் மண் கடத்தல் மணல் கடத்தல் கஞ்சா விற்பவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள் சாராயம் விற்பவர்கள் ஆகியோரை அழைத்து ரகசிய கூட்டம் போட்டு மாமூல் ரேட் வசூலிப்பதற்கு ஏஜென்ட்;கள் நியமனம் செய்து விருந்துடன் கூட்;டத்தை ரகசியமாக முடித்துள்ளனர்.
காளசமூத்திரம் இளையராஜா பள்ளகொல்லை சுந்தர் வாழியூர் மணி வண்ணான்குளம் அத்தி மலைப்பட்டு சுபாஷ் புதுப்பாளையம் பிரகாஷ் 3 லாரி குப்பம் நேதாஜி 4 லாரி தங்கராஜ் 2 லாரி செல்வம் 2 கொங்கராம்பட்டு கேட் சுரேஷ் 3 லாரி வண்ணான்குளம் சிவா 2 கிருஷ்ணகாந்த் ஆகியோர் மாத மாமூல் கொடுத்து மண், மணல் ஆகியவை கடத்தி வருகின்றனர். மேலும் 28 லாரிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மாமூல் கொடுக்கின்றனர்.
காவல்துறை மாமூலுடன்; மணல் மொரம்பு மண் கடத்தல் ஜோராக நடைபெற்று வருகிறது. இவர்களிடம் மாமூல் பெற்று கொண்டு காவல்துறையினர் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் அளித்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் பொதுமக்களிடமிருந்து மாமுல் பெறுவது கட்டப்பஞ்சாயத்து செய்வது காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களுக்கும் தொடர்பில் உள்ள செல்வகுமார் என்பவர் மூலம் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாப்பாடு வாங்கி கொடுப்பது.
மதுபானங்கள் வாங்கி கொடுப்பது, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது இத்தகைய வேலை நடைபெறுகிறது. காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தாலே இந்த செல்வகுமார் எத்தனை முறை வந்துள்ளார் எத்தனை முறை சென்றுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகவும் தெள்ளத் தெளிவாகவும் தெரிந்துவிடும்
மேலும் திருவண்ணாமலை வேலூர், மாவட்டத்தின் எல்லை பகுதியில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால் உயர் அதிகாரிகள் இந்த காவல் நிலையத்தினை கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது.
கண்ணமங்கலம் பழக்கடை வைத்திருக்கும் செல்வம் முன்னா ஆகியோர் மூலம் மாமூல் பணம் தினமும் வசூலாகிறது.மேலும் இவர்களிருவரும் பலான லீலைகளுக்கு வேண்டிய இளம் பெண்களை சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
. ராஜசேகர்
ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காக்கிகள் குப்பம் நேதாஜி செம்மரம் இரும்புலி குணாவுக்கு சொந்தமான கார்களை தங்களின் சொந்த உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனந்த் என்பவன் மலைவாழ் மக்களின்பேரில் கடன் பெற்றும் இரு சக்கர வாகனங்கள் டிராக்டர் மானிய விலையில் வாங்கித்தருகிறேன் என பலரிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துவிட்டு ஏமாற்றியுள்ளான்.
ஐயப்பன்
இவன் வேலூர் இராணிப்பேட்டை காட்பாடி ஆரணி கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் திறந்து தன் மோசடியயை அரங்கேற்றியுள்ளான் நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என போலி பணி ஆணை வழங்கிய ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டில் ஆய்வாளர் மகாலட்சுமி;. தனிப்பிரிவு கோபி தர்மலிங்கம் ஆகிய மூவரும் பணம் பெற்றுக்கொண்டு புகார் அளித்தவரையே மிரட்டி புகரினை வாபஸ் பெற வைத்துவிட்டனர்.
கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒயின்ஷாப்புகளில் மாத மாமூல் மற்றும் சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்வர்களிடமும், பார் உரிமம் இல்லாமல் பார் நடத்தி வரும் பேர்வழிகளிடம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு மாமூல் வசூல் செய்து வருகின்றனர்.
. அசோகன்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் காட்டன் சூதாட்டம் தடை செய்யபட்ட லாட்டரி குட்கா வியாபாரம் மற்றும் பலான லீலைகளுக்கு என வகை வகையாக ரேட் நிர்ணயம் செய்து அதற்கு பட்டியல் போட்;டு போர்டு வைக்காத குறையாக ரேட் நிர்ணயம் செய்து வசூல் செய்துவருகின்றனர்
குறிப்பாக உரிமம் இல்லாமல் பார் நடத்துபவர்களிடம் மாத மாமூல் ரூ.25,000ஃ- எனவும் சாராயம் விற்பவர்களிடம் வாரம் ரூ.20,000ஃ- என இருவரும் போட்டி போட்டு வசூல் செய்து வருகிறார்கள். இதில் ஜெயபாலன்; உரிமம் இல்லாமல் பார் நடத்தி கொண்டு மாமூல் வசூல் செய்து கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் காவல்நிலைய எல்லை முழுவதும் 2 சாராய பாக்கெட்டுகள் 50 ரூபாய் விலையில் மாவட்டம் முழுவதும் கடைகள், பேருந்து நிலையங்கள், என எந்த இடத்திலும் மொபைல் நிலையங்கள் போன்று சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
கண்ணமங்கலம் பகுதியில் போலிசார் மாமூலுடன் சூதாட்ட கிளப் மற்றும் மாந்திரிக வேலைகள் செய்து மோசடி வேலைகள் நடத்தி வருகன்றார்
கந்து வட்டி தொழில் செய்யும் பேர்வழிகளான அதிமுக கிளைசெயலாளர் மண்நாயக்கன்பாளையம் விஜயகுமார் மற்றும் அதிமுக பிரமுகர் ராஜாசேகர் திமுக வைச்சேர்ந்த குப்பம் விக்கி என்கிற விக்னேஷ் புத்தூர் அய்யப்பன் பள்ளகொல்லை அசோகன் ஒண்ணுபுரம் முருகன் ஆகியோர் காக்கிகளுக்கு மாமூல் கொடுத்து கந்து வட்டி தொழில் செய்து வருகின்றனர்.
அதிமுக கிளைசெயலாளர் மண்நாயக்கன்பாளையம் விஜயகுமார் குப்பம் விக்கி என்கிற விக்னேஷ் பள்ளகொல்லை அசோகன் ஆகியோர் பேரில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட சிலர் புகார் கொடுத்து அவர்கள் பெயரில் கந்து வட்டி வழக்கு பதிவு செய்து அவர்கள் ஜாமினில் வெளியே வர அனைத்து உதவிகளையும் காக்கிகள் முன் நின்று ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஏற்கனவே அழகுசேனை பெருமாள் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கந்து வட்டி பேர்வழிகளின் அட்டகாசத்தால் எழதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டனர் அந்த வழக்கு கரன்சி பேரத்துடன் ஊத்தி மூடப்பட்டது
கந்து வட்டி பேர்வழிகளால் பாதிக்கப்பட்டு புகாரளித்த நபர்களை கந்துவட்டி கும்பல்
சாதீய வன்கொடுமை வழக்குகள் புனைந்தும் அவர்களை காவல்துறை மூலம் கைது செய்யவும் அவர்களை கூலிப்படையினர் மூலம் தீர்த்துகட்டவும் ரகசிய ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.
என்கிறது காக்கிவட்டாரம்
ஹோட்டல்களில் உணவுப் பொருள்களுக்கு விலை பட்டியல் போட்டிருப்பது போல், எப்ஐஆர் போடவும், கைது செய்யவும், தலைமறைவாக இருக்க வைக்கவும் என பட்டியல் போட்டு கல்லா கட்டி வருகிறது
ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் தனிப்பிரிவு கோபி ஆகிய மூவரின் மொபைல் எண்களின் யாருடன் பேசியுள்ளார்கள் என கால் இஸ்டரி எடுத்தாலே குற்றவாளிகளுடனான தொடர்புகள் குறித்து கண்டறியலாம்;.
;.
ஆய்வாளர் மகாலட்சுமியின்; காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வசூல் வேலைகளையும் தானே முன் நின்று கவனித்துவருகிறார்.
இவருடைய மீட்டிங் பாயின்ட் பழக்கடை செல்வம் என்கிறது காக்கி வட்டாரம்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மேற்படி குற்றங்கள் குறித்து புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்
வடக்கு மண்டல ஐஜீ அஸ்ரா கார்க் மேற்படி குற்றங்களை தடுக்க முனைந்தாலும் மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் மாமூல் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதால் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்க முடிவதில்லை எனவே இதுகுறித்துவிசாரித்து ஐஜீ அஸ்ரா கார்க் காக்கிகளுக்கும் அவர்களின் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா. ?
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்