மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு
அணையிலிருந்து பெருங்கால் பாசன. மதகு மூலம் 141 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 30கன அடி வீதம் தண்ணீரை திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா திறந்து வைத்தார்.
இதன்மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மணிமுத்தாறு அணைமுக்கிய செய்திகள்விவசாயம்