மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதியிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகரப்புறங்களில் உள்ள சுய உதவி குழுக்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெற தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் சுய உதவி குழுக்கள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம், விருது பெறுவதற்கான விண்ணப்பித்தன வருகின்ற ஜூன் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துதல் குழுவின் சேமிப்பு தொகையை முறையாக செயல்படுத்துதல்.
வங்கியின் கடன் பெறுதல் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதல். திறன் வளர் பயிற்சி வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் மக்கள் அமைப்புகளை ஈடுபடுத்துதல் ஆகிய 6 காரணங்களில் அடிப்படையில் தர மதிப்பீடு செய்யப்படும் .
மேலும் தகுதியான குழு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவினான விருதுகள் வழங்கப்படும் அவ்வாறு அவர் கூறியுள்ளார்.